ஆடியும் நித்தம் ஓடியும் ஆனந்த
நண்பர் கூடியும்
தேடிய சிவனைப் பாடியும் தேகத்தில் திருநீர் பூசிய
கோடியி லொருவ னாகியும் கொண்டாட்டம்
போட்ட வாலிபம்
ஆடியே போன நாளிலும் அச்சிவனை மறக்கி
லேனடி ! (1)
(வாய்பாடு: விளம், மா,
விளம் . காய்,
மா, விளம்)
"சிதம்பரே சர்,சிவ காமி" சிரித்தருள்
அழகிய கோவில் ,
அதற்கரு கிலேகுளிர் தண்ணீர் அலைகிற கனடியன் கால்வாய் ,
இதற்கெலாம் எழிலினைக் கூட்டும் இளம்பொதி
கைதரும் காற்றில்
பதமென சிவபிர தோஷம் பலரினை இணைக்கிற
தென்பேன் ! (2)
(வாய்பாடு: விளம், விளம்,
மா, விளம், விளம்,
மா )
(19.12.2014)
கண்களைத் திறந்து வைத்து கங்கையைச்
சுமந்த ஈசன்
பண்களைப் படிக்கும் போது பற்றினைக் கொள்வ
தெல்லாம்
புண்ணென எண்ண வைக்கும் ! பொன்னொளி
அண்ணல் மூன்று
கண்ணனைப் பற்றிக் கொண்டு காலனை
வெல்லச் சொல்லும் ! (3)
வாசனை போக வேண்டி வார்சடை
பித்தன் பாத
வாசனை கொள்ள வேண்டும் ! மாதினை
இடத்தில் வைத்த
ஈசனைப் போற்றும் இந்த நேசனை
நிமிரச் செய்ய
யோசனை என்ன வேண்டும் ? யோகனே "சிதம்ப ரேசா !" (4)
(வாய்பாடு: கூவிளம், மா ,
மா, கூவிளம், மா ,
மா )
(02.01.2015)
உருஅரு ஒன்றாய் உள்ளோன் ஒளிவழி
நன்றாய் நாமும்
அருகிலே ஆழ்ந்து நெஞ்சுள் அனுபவித்
திருக்க வேண்டும் !
பெருஉரு நந்தி தேவன் இசைக்கிற
நாத வெள்ளம்
இருசிறு செவிக்குள் சென்று இயல்புட
னொலிக்கக் கேட்போம் ! (5)
சிறுசிறு தும்பைப் பூவை சிவனையே எண்ணிக்
கட்டி
நறுமணப் பூக்கள் சேர்த்து நடப்பதுன்
செயலே என்று
விருப்பமாய் பாதம் சேர்த்தால் வினைகளை அறுப்பான்
ஈசன் !
திருப்பமாய் வாழ்வ ருள்வான் பிறைமதி
"சிதம்ப ரேசன் ! "(6)
(அறுசீர்விருத்தம் வாய்பாடு: கருவிளம், மா ,
மா, கருவிளம், மா ,
மா ) (18.01.2015)
அந்தநாள் எண்ணத்தில் ஆனந்தம்
அத்தனின்
கோவிலுக்குள் கல்யாணம் !
சிந்தனை செய்வோர்கள் எல்லோரும்
சேர்ந்தொரு
நல்லிசையில் "ருத்ரத்தை"
வந்தனை செய்தபடி
செல்வார்கள் !
வாக்குடன் உள்நினைவும் ஒன்றாக்கி
எந்தனை எம்குலத்தைக்
காத்திடென
ஈசனை உள்ளத்துள் கேட்பார்கள் !.
(7)
காளையின் மேலவனே
காட்சிதரக் ,
கண்களோ கற்பூரம் ஒற்றிவர ,
தாளையென் கைகளுமே
பற்றிவர ,
தாயினைப்
போன்றவன்தன் அன்பினிலே
ஆளைஎனைக் கண்டதிலே
ஆர்ப்பரித்தான் !
ஆசையில் வில்வத்தைக்
கொண்டுவிட்டான் !
நாளையின் காலத்தை
நானறியேன் !
"நற்றுணை நமச்சிவாயம்
நன்கறிவேன் !" (8)
(01.02.2015)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: கூவிளம், காய், காய்,
கூவிளம், காய், காய்)
நீலக் கழுத்து விடமும் , நீண்ட கொடிய அரவும் ,
வேல வனுக்கு விழியால் பிறப்பைத் தந்த உருவும் ,
ஆல மரத்து நிழலில் அமைதி யடையும் குருவும் ,
காலங் கடந்த சிவனே ! கருணைக் கடவு ளமுதே !
நினைத்த நொடியில் சுடராய் ,
நிறைந்த அருளின் மலராய் ,
அனைத்துக் கவலை துடைக்கும்
அழகி உமையின் உயிரே !
முனைந்து வணங்க மறந்த
முதிரா குணத்தோ னிவனை
நினைந்து கரத்தி லணைத்து நிழலாய் இருக்கும் சிவனே!
(16.02.2015)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, மா, மா, மா, மா, )
இருண்ட மனதில்
ஒளியானாய் ; இயற்கை நியதிப் பொருளானாய் ;
உருண்டு புரண்டு
அழுதாலும் உயிருள் குளிர்ந்த சுகமானாய் ;
சுருண்டு கிடக்கும்
பாம்பினையே தொட்டு எழுப்பும் குருவானாய் ;
மருண்மா அகந்தை
அழிந்திடவே மனதை ஒடுக்கும் சிவமானாய் !
சிறகை விரித்துப்
பறக்கின்ற சிந்தை யதனில் கவியானாய் ;
பிறவி எடுத்த
பயன்சொல்லி பிறருக் குதவும் கையானாய் ;
இறக்கும் வரைக்கும்
எளியோனாய் இருந்து பழக வழியானாய் ;
மறக்கும் பொருளாய்
அமையாமல் மதியை அணிந்த அரனானாய் !
(03.03.2015)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய் ,)
சின்னஞ் சிறிய வயதினிலே சிட்டாய்ப் பறந்து திரிகையிலே
என்னுள் இருந்து விழிகாட்டி இருந்தாய் சிவனே
வழிகாட்டி !
கன்னம் குழித்துச் சிரிக்கின்ற கரும்புச் சுவையாம்
சரவணனின்
சின்னம் நெருப்புச் சுவைவண்ணா ! சிறுவன் எனக்கருள்
செய்நன்னா !
உயரே
பரந்த ஒலிவானம் உதிரும் மொழியோ சிவநாமம் !
பயனை
நினைத்துப் பணியாத பனிபோ லிருப்போ
னுருவாகும் !
நயனம்
இரண்டும் ஒளிவீச நடக்கும் வடிவில் குருவாகும் !
அயனும்
அரியும் அறியாத அவனே அருமை அரனாகும் !
(18.03.2015)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய் ,)
ஒருபூ எடுத்துநான்
போடாமல் ஓடிய நாளாய் இருந்தேனே !
தெருவில் திரிகிற
தீவட்டி , தேவடி ஈசன் மறந்தேனே !
பருவச் சிறுமையில்
பாராமல் பாடிட வார்த்தை இழந்தேனே !
அருமை அருட்பெரும்
ஆனந்தன் ஆடிட நெஞ்சம் மறுத்தேனே !
கல்வி அறிவினைக்
கைவிட்டு கயவனின் கையில் கிடந்தேனே !
பல்கிப் பெருகிய
பொய்யினிலே பாடியே நாளைக் கழித்தேனே !
வில்வ இலையைக்
கொள்ளாமல் வீணடிக் கலையைக் கொண்டேனே !
நல்ல சிவனிடம் கேட்கின்றேன் நாடிய நானாய்த் தெளிவாயே !
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, விளம், காய் , விளம் ,மா, காய் ,)
(01.04.2015)
ஆயிரம்மாய் நாமங்கள் சொல்லி
வாய்மணக்கும் ஆன்மீக மல்லி !
தூய்மையிலா உள்ளுக்குள்
நாய்குரைக்கும்
"லொள்ளுக்குள்"
சாய்ந்துவிடா தீயகுணம் வில்லி ! (1)
உருண்டுவரும் நாள்போயே போகும்
இருண்டமனம் உந்தாளை ஏகும்
இனியவனே என்விழியே
இனியிவனுள் நீநுழையே
மருண்டமனம் ஆதிசிவ மாகும் !(2)
சுமையெனவே அகங்காரம் ஏற்றி
சுவையெனவே எண்ணவைத்தாய் மாற்றி !
நவநவமாம் சிவஒளியே !
திவலையிவன் ஒர்துளியே
!
இவையெல்லாம் உன்னருளே போற்றி !
(3)
(குறும்பா:( காய், காய்,
மா,
காய், காய், மா,
காய், காய்,
காய், காய்
காய், காய், மா
)
(16.04.2015)
"சந்திரனைக் கொண்டாய்
! நீண்ட சடையில் கங்கை வைத்தாய்
!
செந்தீயைக் கையில்
கொண்டாய் ! நீலக் கழுத்தில் நாக
சந்தனத்தைப் பூசி
நின்றாய் ! சத்த உடுக்கை கூட
தந்திரமாய்க் கையில்
கூட்டித் தாளங் கொட்டு கின்றாய் ! (4)
புயலெனவே சுற்றி
நித்தம் புதிதாய் ஆடு கின்றாய் !
முயலகனைக் கூடக்
காலில் முட்டிப் பிடித்தி
ருப்பாய் !
நயமுடனே பணிந்து நானும் நடரா ஜநுனைக் கேட்பேன்
"பயலிவனின் பாப மூட்டைப் பந்தை எங்கு
வைத்தாய்!"
(8)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய்,மா,மா, மா, மா, மா )
(01.05.2015)
மணிக்கணக்காய் கண்மூடி உன்னை மனதினிலே கண்முன்னால் காணத்
துணிவில்லை ; பொறுமையுமே இல்லை ; துளிகூட பக்தியுளம் பேணாப்
பிணியாளன் என்னும்பேர் பெற்றேன் ! பித்தனுனை எண்ணுவது மில்லை !
அணியணியாய் நற்கவியால் உன்னை அன்போடு போற்றுவது மில்லை !(4)
பெற்றோரைத் திட்டியவன் ; ஊரில் பெரியோர்ச்சொல் கேட்காமல்
நித்தம்
நெற்றிநீரைப் பூசாமல் காலி நெற்றியாக வைத்தவனின் உள்ளம்
பற்றியவா ! பரமசிவா ! உன்னை பக்திசெயா மூடனுக்கும் ஞானம்
பற்றிடவே அருள்செய்தாய் ! அந்தப் பரந்தமனம் எனக்கில்லை ஈசா ! (8)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய்,காய் ,மா, காய் ,காய், மா )
(15.05.2015)
கனியிலும் ,காயிலும் ,
காடு , கடல்வெளி ,
வானிலும்,
மூடு
பனியிலும்,
கொட்டுற தாள பதமிடும் ஒலியிலும், பிச்சை
தனியனாய் கேட்கிற ஈசன் தாளினைப் பற்றிய எந்தன்
இனியதோர் கவியிலும், வாழும்
இறைவனே !
தோழனே!
வாழி ! (4)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: விளம், விளம்,மா, விளம், விளம், மா )
(30.05.2015)
வெள்ளிப் பனிஉருவில் வெள்ளீசா ! விரைந்து உருகிவர கங்கேசா !
அள்ளி வரமளிக்கும் அருளீசா !அமரர் தினம்போற்றும் யோகீசா !
புள்ளி மான்பிடித்த நடராசா ! பொதுவாம் சுடலைக்கு நீராசா !
வள்ளி மாமனெனும் கர்வேசா ! வளரும்
அறநெறியே சர்வேசா ! (4)
(அறுசீர் விருத்தம் அரையடி வாய்பாடு: மா, காய்,காய் )
(14.06.2015)
இரவா பகலா இறைவோய்நீ ! இரண்டு மான பொருளோநீ !
இரவாப் புகழின் எழிலோநீ ! இருந்தும் இல்லா
உருவோநீ !
அரவாய் அமுதாய் கலப்போநீ ! அழகுக் கவிதை நெருப்போநீ !
வரவாய் எனக்குள் உறவோநீ ! வசவில் லாத துறவோநீ ! (4)
சுகமாய் வலியாய் இருந்தேநீ சுழலும் விதியாய்
வருவாய்நீ !
நகமும் சதையு மானாய்நீ ! நரனில் முக்தி
மானாய்நீ
அகமும் புறமும் ஒளிர்ந்தாய்நீ ! அசுர சுரனின்
குணத்தில்நீ
நிகரே இல்லா பலவான்நீ ! சிவனே தமிழ்நற்
கவியேநீ ! (8)
(அறுசீர் விருத்தம் அரையடி வாய்பாடு: மா, மா, காய்)
(29.06.2015)
சித்திரம் வரையும் விரல்களெனின்
சிவனே உன்னைநான்
வரைந்திருப்பேன் !
முத்திரை அறிந்த முனிகளெனின்
மௌன மின்னலாய்
ஒளிர்ந்திருப்பேன் !
நித்திரை வேளை நினைத்திருந்தால்
நீண்ட வேதனை
அழித்திருப்பேன் !
எத்திரை போட்டு மூடியதோ
இறைவா என்மனம்
திறப்பதில்லை !(4)
நந்தியைப் போலே நானிருந்தால்
நன்றாய் உன்னிரு
தாள்பிடிப்பேன் !
சிந்திய வார்த்தை இசையானால்
சிறந்த கவியென சேவிப்பேன்
!
அந்தியில் வானச் சிவப்பானால்
அழகு நெற்றியில்
கண்ணாவேன் !
எந்திர வாழ்வில் ஓடுவதால்
ஈசன் பொன்னடி அறிவதில்லை
! (8)
((அறுசீர் விருத்தம் : மா, விளம், காய், மா,
விளம், காய்)
(13.07.2015)
முத்தான
இளமையிலே பக்தி
முற்றாமல் இளமையிலைத் தேடி
சத்தான
பொழுதுகளைக் காதற்
சந்தையிலே கழித்தேனே பாவி!
பித்தாகத்
திரிந்தவனைக் கூட்டி
பிள்ளையெனச் சேர்த்தகுரு பாதம்
பித்தாக
ஆனேன்வாய் பொத்தி
பேச்செல்லாம் சிவநாம சக்தி !
((அறுசீர் விருத்தம் : காய்,காய்,மா,
காய்,காய்,மா )
(29.07.2015)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக