1 ஆற்றில் குளிக்க அழைத்துப்போய் நீச்சலுடன்
காற்றை அடக்கிநற் காயத்ரி- நாற்றை
மனதில் பதிந்திட வைத்தயென் அப்பா
எனதுள் உறையும் உயிர்.
2. சட்டைப்பைக் குள்ளே சலசலக்கும் காசெல்லாம்
சட்டெனக் காணாது சாய்ந்தந்த - விட்டத்தைப்
பார்ப்பார்! எடுத்த பயல்நான் அவர்மடியில்
நார்போல் கிடப்பேன் நரி.
3. கடுஞ்சொல் வசையாகக் கண்டிக்க மாட்டார்!
படும்கை தடவி, பதியும் - நெடிய
பகைமறக்கப் பாசத்தால் பண்பெனும் நல்ல
நகைபூட்டும் அப்பா நண் பன்.
4. அப்பாவின் சம்பளநாள் அக்காவுக் கும்எனக்கும்
எப்பவுமே கொண்டாட்டம்; அந்நாளை - இப்போதும்
எண்ணினால் அல்வாபோல் என்னுள் இனிப்பதனால்
கண்ணின் மணிஅப்பா காண்.
5. சாப்பாட்டு வேளை சரிசமமாய் உட்கார்ந்து
கூப்பாடு போடாமல் கொஞ்சம்நீ - ஆக்காட்டு,
என்றே பரிவாக இன்னமுது
ஊட்டிவிட்ட
என் அப்பா என்றும் இறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக