பொருனை

பொருனை

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

எடுத்த பிறவி

     ஒருநாமம் இல்லாத இறைவனுக்கு நாமோ
       "இருநாம" மிட்டுதின மழைக்கின்றோம் ஆசையால்
         பெருமாளே என்று!  திருமண்ணோ திருநீரோ
        அருமைப் பெருமானை அலங்கரிப்ப தில்லை!
        நம்மோடு வாழ்கின்ற நல்லநம் குணந்தானே
        நம்பெருமான் விரும்பும் நகைய லங்காரம்!
         அண்ணன் தம்பியாய் அன்புநாம் கொள்ளாமல்
        கண்ணை மறைக்கவா கடவுளின் தத்துவம்!
        உலகம் உயர்ந்திட உள்ளந்தான் உயரணும்!
        கலகம் என்பது காணாது போகணும்!
        ஆற்று நீரினை அள்ளிக்கை யளக்கலாம்
        காற்று வெளியினைக் கணிக்கக்கை முடியுமா?
        கணிக்க முடியாக் கடவுளைத் தேடுவோர்
        தணிக்க வேண்டும் தங்கள்முதல் கோபத்தை!
        அடுத்த உயிரிடம் அன்பில்லா தோர்க்கு
        எடுத்த பிறவி என்பதுவீண் தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக