"ஒளியையே பார்த்துப் பார்த்து
ஒளிபெறும் கண்கள் ; சாந்திக்
களியையே உணர்ந்து நிற்கும்
கனிவுடை நெஞ்சம் ; கூர்த்த
உளியையே நட்ப்பாய்க் கொண்டு
உயிர்பெரும் சிறப்பம் ; மோன
வெளியையே விரும்பி ஏற்கும்
வினையிலா ஞான வாழ்க்கை; (4)
இனியதைக் கொண்டு கொண்டே
இருப்பதில் நிறையும்
எண்ணம்
இனிவரும் காலம் எல்லாம்
இன்பமே என்று சொல்லும் !
அனைவரும் ஒன்று கூடி
அடுத்தவர் நலமே போற்றி
தினையொரு பொழுதி ருந்தால்
தீவினை மாய்ந்து போமே!" (8)
( 14.10.2014 8.30 am)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக