சிறுவயது
முதற்கொண்டு சிவனையும் மாலனையும்
சிறுகாலைப்
பொழுதுமுதல் சிந்தையிலே வைத்ததனால்
சிறுமையாம்
பேதங்கள் சேராத மதிகொடுத்து
சிறுவநெனை
நெறிசெய்த சிதம்பரனை மறப்பேனோ ! (4)
குருடனாகிக்
குலவழியைக் கொள்ளாத வீணான
திருடநெனை, திருத்திடவே தெளிந்தவோர்
நல்ஞான
குருதாளில் விழவைத்துத் தொடர்பிறப்பை துண்டிக்க
அருள்செய்த
அம்மையப்பன் அவனின்றி யாரெனக்கே ! (8)
சங்கரநா
ராயணனைச் சரியாகப் புரியவைத்த
பங்கிற்கு
குருபாதப் பரம்பரையைத் தொழவேண்டும் !
எங்கிருந்து
நினைத்தாலும் எளியனிவன் பரம்பரையை
அங்கிருந்தே
காத்தருள்வார் ! அவரிருதாள் போதாதோ! (12)
நெல்வயலில்
இளங்காற்று நெற்றிதொட்டு வாழ்துதல்போல்
பல்முளைக்கும்
முன்னேயே பாலுடனே பண்பூட்டி
நல்வயலாய்ப்
பிறப்பினையே நற்பயிராய்ச் செய்தவளை
எல்லையிலா
பராசக்தி
என்பதிலே பொய்யுண்டோ? (16)
( வாய்பாடு: காய், காய், காய், காய்....".தரவு கொச்சக் கலிப்பா" )
(08.06.2015)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக